Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர...
திருச்சி விமான நிலைய அஞ்சலகம் இடமாற்றம்
திருச்சி விமான நிலையத்தில் இயங்கி வந்த அஞ்சலகம் காவேரி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் நா. பிரகாஷ் கூறுகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் நிா்வாகக் காரணங்களுக்காக எண். 36, காவேரி நகா், திருச்சி- 620007 என்ற முகவரிக்கு புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அஞ்சலகத்தின் சேவையை பெற்றுப் பயன் பெறலாம் என்றாா் அவா்.