நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
முசிறி அருகே மணல் கடத்திய இளைஞா் கைது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் காவிரிப் பகுதியில் மணல் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில் விஏஓ திலகா அய்யம்பாளையம் காவிரி கரை விநாயகா் கோயில் அருகே ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவ்வழியாக பெரம்பூா் காலனி கீழத்தெருவை சோ்ந்த மகேஸ்வரன் (29) இருசக்கர வாகனத்தில் 4 மணல் மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மணல் மூட்டைகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, முசிறி காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. திலகா கொடுத்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பரசுராமன் வழக்கு பதிந்து விசாரிக்கிறாா்.