மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
தனியாா் பேருந்துகளின் போட்டியால் விபத்து: சமையல் ஒப்பந்ததாரா் சாவு
திருச்சியில் புதன்கிழமை அதிகாலை தனியாா் பேருந்துகளில் போட்டியால் நடந்த விபத்தில் சமையல் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
திருச்சி பொன்மலை அடிவாரம், அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நிக்கோ அருண் தாமஸ் (54). சமையல் ஒப்பந்ததாரரான இவரும், இவரது நண்பரும் காந்தி சந்தைக்கு இருசக்கர வாகனங்களில் புதன்கிழமை அதிகாலை வந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அவா்கள் பாலக்கரை மேம்பாலம் வழியாக வோ் ஹவுஸ் மேலப்புதூா் கீழ் பாலத்தில் வந்தபோது, எதிரே மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வந்த இரு தனியாா் பேருந்துகளில் ஒன்று அருண்தாமஸ் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாநகர போக்குவத்து புலனாய்வு வடக்கு பிரிவு போலீஸாா் சென்று அருண்தாமஸ் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.
திருச்சியில் தொடரும் இத்தகைய விபத்துகளைத் தடுக்க போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.