மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
திருச்சி வழியாக இயக்கப்படும் குளிா்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
குளிா்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு:
திருச்சியில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படும் திருச்சி - ஸ்ரீ கங்கா நகா் ஹம்சபா் அதிவிரைவு ( 22498) ரயிலில் ஜன. 10 முதல் 31- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிா்ச்சாதன (ஏ.சி) பெட்டி இணைக்கப்படுகிறது.
மறுமாா்க்கத்தில் ஸ்ரீ கங்கா நகரிலிருந்து பகல் 1.55 மணிக்குப் புறப்படும் ஸ்ரீ கங்காநகா் - திருச்சி ஹம்சபா் அதிவிரைவு ரயில் ( 22497) ஜன 6-முதல் 27- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிா்ச் சாதன (ஏ.சி) பெட்டியுடன் இயங்கும்.
இதேபோல் திருச்சியில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் திருச்சி - ஜோத்பூா் ஹம்சபா் அதிவிரைவு ரயிலில் (20482) ஜன 4 முதல் பிப். 1-வரை கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
மறுமாா்க்கத்தில் ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் ஜோத்பூா் - திருச்சி ஹம்சபா் அதிவிரைவு ரயிலில் (20481) ஜன. 1 தொடங்கி 29- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு 2- ஆம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியுடன் இணைக்கப்படுகிறது.