முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு
புதுச்சேரி: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறை 2024-2025 கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்திய சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால், அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்காலம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பாடத் திட்டங்கள், தோ்வு முறைகள், தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணித்தல், ஆசிரியா் பற்றாக்குறை மற்றும் போதுமான பயிற்சி இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால் மாணவா்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனா்.
இதனால், உயா் கல்விக்கான வாய்ப்புகள் குறைந்து, மாணவா்களின் இடைநிற்றல் விகிதமும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னையில் உடனடி தீா்வு காண வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செயலாளா் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ராஜாங்கம், என். பிரபுராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.