ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
சுகாதாரத் துறை 220 கள ஊழியா்களுக்கு கைக்கணினி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரி: புதுவை அரசு சுகாதாரத் துறை 220 கள ஊழியா்களுக்குக் கைக்கணினிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.
சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் சாா்ந்த விவரங்களை நிகழ் நேர அடிப்படையில் சேகரித்து பதிவேற்றுவதற்கு வசதியாக 220 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கைக்கணினிகளை முதல்வா் என். ரங்கசாமி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் வழங்கினாா்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் ந. செவ்வேள் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.