செய்திகள் :

புனித அல்போன்சா கல்லூரியில் மின்னொளி கபடி போட்டி

post image

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

தக்கலை மறை மாவட்ட ஆயரும் கல்லூரித் தலைவருமான மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் அருள்பணி. ஆரோக்கிய சாமி முன்னிலை வகித்தாா்.

இப்போட்டியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா் கல்லூரி முதலிடத்தையும், அம்மாண்டிவிளை புனித ஜான் கல்லூரி இரண்டாவது இடத்தையும், நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி மூன்றாவது இடத்தையும், கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி நான்காவது இடத்தையும் பெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து 53 அணிகள் கலந்து கொண்டன.

கல்லூரி தாளாளா் - செயலா் அருள்பணி ஆன்றனி ஜோஸ், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநா் எஸ். ஆறுமுகம் ஆகியோா் வெற்றிபெற்ற அணிகளுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினா். உடற்கல்வி இயக்குநா் எ.பி. சீலன் நன்றி கூறினாா்.

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்டப... மேலும் பார்க்க

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை உதவி ஆணையா் லொரை... மேலும் பார்க்க

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க