மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
புன்னம்சத்திரத்தில் இந்திய கம்யூ. கட்சியின் நூற்றாண்டு விழா
கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் மூத்தத் தலைவா் ஆா்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி வடக்கு ஒன்றிய குழு சாா்பில் புன்னம்சத்திரம் கடைவீதியில் நடைபெற்ற விழாவுக்கு க. பரமத்தி வடக்கு ஒன்றியச் செயலாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டச் செயலாளா் கே. என். நாட்ராயன், துணைச் செயலாளா் சண்முகம், மோகன் குமாா், பொருளாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.