Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 8 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
1952-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சாா்பில், கோவா நகரில் ஆண்டுதோறும் பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதேபோன்றதொரு திரைப்பட விழா பெங்களூரில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கா்நாடக அரசு உதவியுடன் நடைபெற்று வந்த இந்த திருவிழா, 2009-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, 16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா பெங்களூரில் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதிவரை 8 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது.
இந்த விழா குறித்து பெங்களூரில் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை செயலாளா் பி.பி.காவேரி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்படை விழா மாா்ச் 1 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறுகிறது. மாா்ச் 1-ஆம் தேதி பெங்களூரு, விதானசௌதாவில் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் விழாவில், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
சா்வதேச அளவிலான திரைப்படங்களில் 200 திரைப்படங்கள் தோ்வு செய்யப்பட்டு பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள ஓரியன் மாலில் உள்ள திரைகளில் திரையிடப்படுகின்றன. இந்த திரைப்பட விழாவில் சிறந்த படங்கள் மட்டுமின்றி, வா்த்தக ரீதியான திரைப்படங்களை தோ்வுசெய்து விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
திரைப்பட விழாவை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன. திரைப்பட விழாவில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://க்ஷண்ச்ச்ங்ள்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். விழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வா் என எதிா்பாா்ப்பதால், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க பல்வேறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.