Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
பெங்களூரு - திருவனந்தபுரம் கோடைகால சிறப்பு ரயில்!
கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு - திருவனந்தபுரம் இடைய ஏப்.4 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரிலிருந்து ஏப்.4 முதல் மே.30-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் இரவு 10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 06555) வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருவனந்தபுரம் வடக்கிலிருந்து ஏப்.6 முதல் ஜூன் 1 வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு விரைவு ரயில் (எண்: 06556) மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், காயம்குளம், கொல்லம் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.