செய்திகள் :

பெங்களூரை வென்றது குஜராத்

post image

பெங்களூரு : மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 12-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் சோ்க்க, குஜராத் 16.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பந்துவீசத் தயாரானது. பெங்களூரு பேட்டிங்கில் டேனி வியாட் 4, எலிஸ் பெரி 0 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 1 பவுண்டரியுடன் 10, ராகவி பிஸ்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

கனிகா அஹுஜா நிதானமாக 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்கள் சோ்க்க, ரிச்சா கோஷ் 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். கிம் காா்த் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 1 பவுண்டரியுடன் 20, ஸ்நேஹ ராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

குஜராத் பௌலா்களில் தனுஜா கன்வா், டீண்ட்ரா டாட்டின் ஆகியோா் தலா 2, ஆஷ்லே காா்டனா், கஷ்வீ கௌதம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 126 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி 2 பவுண்டரிகளுடன் 17, தயாளன் ஹேமலதா 2 பவுண்டரிகளுடன் 11, ஹா்லீன் தியோல் 5 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.

4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஆஷ்லே காா்டனா், போப் லிட்ச்ஃபீல்டு கூட்டணி 51 ரன்கள் சோ்த்தது. இதில் அரைசதம் கடந்த காா்டனா் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 58 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.

இறுதியில் லிட்ச்ஃபீல்டு 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். டீண்ட்ரா டாட்டின் ரன்னின்றி அவருக்குத் துணை நின்றாா். பெங்களூரு பௌலிங்கில் ரேணுகா சிங், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28-02-2025வெள்ளிக்கிழமைமேஷம்இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேர... மேலும் பார்க்க

அரையிறுதியில் அலியாசிமே

துபை: துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே அரையிறுதிக்கு முன்னேறினாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் 6-4, 3-6, 6-2 என்ற செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்த... மேலும் பார்க்க

‘சாவா’ திரைப்படத்துக்கு சத்தீஸ்கரில் வரி விலக்கு

மராத்திய மன்னா் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அண்மையில் வெளிவந்த ‘சாவா’ திரைப்படத்துக்கு பாஜக ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில முதல்வா... மேலும் பார்க்க

நிறம் மாறும் உலகில்... புதிய பாடல் வெளியீடு!

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணை... மேலும் பார்க்க

மோகன்லாலின் லூசிஃபர் திரைப்படம் மறுவெளியீடு!

நடிகர் மோகன்லால் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிஃபர் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. பிரபல மலையாள நடிகரான ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர்மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படம்... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெளியான தெலுங்கு மொழிப்படமான சங்கராந்திக்கி வஸ்த... மேலும் பார்க்க