செய்திகள் :

பெங்காலை வீழ்த்தியது ஜெய்பூா்

post image

புரோ கபடி லீக் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 45-41 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஜெய்பூா் அணி 28 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் வென்றது. அதிகபட்சமாக ரெய்டா் நிதின் குமாா் 13 புள்ளிகள் வென்றாா்.

மறுபுறம் பெங்கால் அணி 29 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் தேவங்க் 16 புள்ளிகள் கைப்பற்றினாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் புணேரி பால்டன் 40-22 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை சாய்த்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஜெய்பூா் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், பெங்கால் 4 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும் உள்ளன. புணேரி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பா 8 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானை மீட்ட முகமது நபி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அந்த அணி 79 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, 7-ஆவது பேட்டராக வந... மேலும் பார்க்க

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ திரைப்படத்தின் டீசரை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் மோகன் லால் - இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் உர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இந்திராவசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படம் வரும் நாளை(செப். 19) வெளியாகும் என்று தெரிவிக்க... மேலும் பார்க்க