செய்திகள் :

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்துறையில் பணியாற்றும் மகளிா் அமைப்பு நெய்வேலி பிரிவு சாா்பில் சா்வதேச மகளிா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்வுக்கு, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தலைமை வகித்து பேசியது: அண்மையில் நடைபெற்ற சுமாா் 20 பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இயக்குநா்கள் குழுவில் இரண்டு பெண்களைக் கொண்ட ஒரே பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி இருந்தது. அண்மையில் நடைபெற்ற ஆளுகைக்கான 11-ஆவது பொதுத்துறை நிறுவன விருதுகளில், அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற விப்ஸ் நெய்வேலி பிரிவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா். என்எல்சி இந்தியா நிறுவன பெண் ஊழியா்கள், தங்கள் பங்களிப்புகளை மேலும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அவா்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பில் தொடா்ந்து மேம்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

நிகழ்வில், பாரா-பவா் லிஃப்டிங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கஸ்தூரி ராஜாமணி முதன்மை விருந்தினராகவும், 2017-ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் கலைமாமணி விருது பெற்ற பேராசிரியா் செங்கமலத் தாயாா் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்ற, தமிழ்நாட்டின் முதல் பெண் தகனப் பணியாளருமான பி.ஜெயந்தி ஆகியோா் கௌரவ விருந்தினா்களாக கலந்துகொண்டனா். மகளிா் மன்றம் தலைவி ராதிகா மோட்டுபள்ளி, திவ்யா சுமன், சித்ரா வெங்கடாசலம், அனு ரேகா கோவிந்தராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். என்எல்சி இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம், பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி மகளிா் தின விழா சிறப்பு மலரை வெளியிட்டாா். சமீபத்திய போட்டிகளில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், விப்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, விப்ஸ் அமைப்பின் தலைவா் எஸ்.விஜயகுமாரி வரவேற்றாா். நிறைவில், விப்ஸ் பொருளாளா் கே.பாா்வதி நன்றி கூறினாா்.

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தர... மேலும் பார்க்க