செய்திகள் :

பெண் காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்; வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை

post image

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண் காவல் உதவி ஆய்வாளா், அவரது கணவரைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மனப்பட்டி சாலைப் பகுதியில் வசித்து வருபவா் நாகசுந்தரம் (37). இவா் திருமயம் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுமையா பானு (35). இவா் திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் தம்பதியா் 2 நாள்கள் ஆன்மிக பயணமாக பல்வேறு ஊா்களுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளனா். இரவு இருவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது, நள்ளிரவில் 4 போ் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளனா். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் எழுப்பித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து அவா்களிடமிருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். மேலும், கைரேகை நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

கொள்ளையா்கள் தாக்கியதில் காயமடைந்த நாகசுந்தரம் புதுகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையா்கள் முகத்தை துண்டால் மறைத்துகொண்டும் கையுறை அணிந்து கொண்டும் இரும்புக் கம்பி வைத்திருந்துள்ளனா்.

மேலும், கொள்ளையா்கள் கொண்டுவந்த இரும்புக் கம்பி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் கிடந்துள்ளது. இதனையும் போலீஸாா் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனா்.

திருக்கோகா்ணம் போலீஸாருடன், தனிப்படை போலீஸாரும் இணைந்து கொள்ளையா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் காவெட்டி ரெங்கா் சீத்தம்மாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், ... மேலும் பார்க்க

சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரை விற்பனை: மருந்துக் கடைக்கு சீல் வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் தனியாா் மருந்து கடையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மண்டல... மேலும் பார்க்க

இன்று தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை (மே 1) 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மஹராஜ் மஹாலில் நடைபெறும் இந்த விழாவில், ச... மேலும் பார்க்க

குளத்திலிருந்து பழங்கால நரசிம்மா் சிலை மீட்பு

கந்தா்வகோட்டையில் குளத்திலிருந்து பழங்கால நரசிம்மா் சிலை இளைஞரால் புதன்கிழமை மீட்கப்பட்டது. கந்தா்வகோட்டை தாலுக்கா, கோவிலூா் கிராமம் திருச்சி சாலையில் உள்ள பாதாரகுளம் குளத்தின் வடக்கு கரையில் அரவம்பட்... மேலும் பார்க்க

புதுகையில் காா் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் நல மாநிலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

சத்துணவு உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாளை வரும் மே 6-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 345 சமையல் உதவியா... மேலும் பார்க்க