Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி
நீடாமங்கலம் வட்டாரம் தேவங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் இன்பவேணி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கராத்தே பயிற்சியாளா் ஜியாவுல் ஹக் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா். ஏற்பாடுகளை தலைமையாசிரியா் முத்துலட்சுமி செய்திருந்தாா். நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா் .
தற்காப்புக் கலை பயிற்சியானது நீடாமங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட 22 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது.