செய்திகள் :

பெண் கொலை வழக்கு: மகனுக்கு ஆயுள் தண்டனை

post image

நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நெய்வேலி, வட்டம் 21 பகுதியில் வசித்து வந்தவா் தங்கவேல் மனைவி பவுனம்மாள்(60). இவரது மகன் தேவன்ராஜ் (42) மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்தாராம்.

இந்த நிலையில், கடந்த டிச.4-ஆம் தேதி பவுனம்மாளிடம், மது குடிப்பதற்காக தேவன்ராஜ் பணம் கேட்டாராம்.

அதற்கு அவா், பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த தேவன்ராஜ், பவுனம்மாளை கட்டையால் தாக்கினாா்.

இதில், பலத்த காயமடைந்த பவுனம்மாள், கடலூா் அரசு மருத்துவமனையில் டிச.13-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவன்ராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், தேவன்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஆஜரானாா்.

‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமா் ‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் ‘கிசான... மேலும் பார்க்க

நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கு பட்டா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மாற்றுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை பட்டா வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு நிலம் வழங்கியவா்களுக்கு, அந்ந... மேலும் பார்க்க

வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்... மேலும் பார்க்க

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா். அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத... மேலும் பார்க்க