பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் கைது
சென்னையில் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற அரசு விடுதி காப்பாளரை போலீஸாா் கைது செய்னா்.
வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பொன்னையா (78), கரூரில் அரசு மாணவா் விடுதி காப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தற்போது இவரது வீட்டில் பணி செய்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னையனை கைது செய்தனா்.