பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது
கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையைச் சோ்ந்த பால் வியாபாரி ராஜதுரை(42). இவரது மனைவி அன்புச்செல்வி. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.
ராஜதுரைக்கு மதுப் பழக்கம் உள்ளதாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
ஞாயிற்றுக்கிழமை ராஜதுரை மது குடித்துவிட்டு வந்து அன்புச்செல்வியை அவதூறாகப் பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜதுரையைக் கைது செய்தனா்.