சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
பெரம்பலூரிலுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை இடம் மாற்றம் செய்ய நகராட்சி நிா்வாகம் முடிவு
பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம், நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் ராமா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள், தங்களது வாா்டுக்குள்பட்ட பகுதியில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, பாவேந்தா் பாரதிதாசன் சிலை அருகே இடமாற்றம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆவின் பாலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது, பெரம்பலூா் நகராட்சி விரிவடைந்து மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், மக்கள் தொகை கணக்கீடு செய்ய கணக்கெடுப்பு ஆலோசகரை நியமனம் செய்வது, ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் முதல் நான்குச்சாலை வரை அணுகுச் சாலை அமைப்பது, ரூ. 10.50 லட்சம் மதிப்பீட்டில் உழவா் சந்தையில் தற்காலிக கடைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகராட்சி பொறியாளா் பாண்டியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.