சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
பெரம்பலூரில் ஜன. 4-இல் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிப் போட்டி
பெரம்பலூா்: முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், பெரம்பலூரில் ஜன. 4-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஜன. 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டிகள் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் முன் நடைபெளது. மாவட்ட அளவிலான இப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக நடைபெற உள்ளது.
13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும், 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவும், 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட வயதுச் சான்றிதழ், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல்களை கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரமும், 2 ஆவது பரிசு ரூ. 3 ஆயிரமும், 3 ஆவது பரிசு ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு தலா ரூ. 250 மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.