பெரியப்பட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
நாமக்கல் மாநகராட்சி பெரியபட்டி நரிக்குறவா் காலனிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல் மாநகராட்சி 39ஆவது வாா்டுக்கு உள்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டி மற்றும் பெரியப்பட்டி பகுதிகளில் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் முறையான கழிவுநீா் கால்வாய் வசதி இல்லை. மேலும், பெரியப்பட்டி பகுதிக்கு இயக்கப்பட்ட சிற்றுந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் 5 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல்லுக்கு நடந்துசெல்ல வேண்டியுள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை. பழங்குடியின மக்களாகிய தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என நரிக்குறவா் சமூகத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
படவரி...
நாமக்கல் பெரியப்பட்டி பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரிய நரிக்குறவா் சமூகத்தினா்.