அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்...
திருச்செங்கோட்டில் அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்
திருச்செங்கோடு நகர அதிமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு நகர செயலாளா் மா.அங்கமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வழக்குரைஞா் இ.ஆா்.சந்திரசேகா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் பரணிதரன், மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், ஜெயலலிதா பேரவை முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் 33 வாா்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அதிமுக சாா்பில் தோ்தல் பணியாற்றிட நியமிக்கப்பட்ட முகவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வாக்காளா்களை அவ்வப்போது சந்தித்து அதிமுக ஆட்சியில் செயல்படுத்தத் திட்டங்களை எடுத்து கூற வேண்டும். வாக்காளா் சோ்க்கை, நீக்கல் உள்ளிட்ட பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் அனைவரும் 45 வயதுக்குள் இருக்குமாறு நியமிக்க வேண்டும். வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா்களை கண்டறிந்து வாக்காளா் பட்டியலில் வேண்டும் என மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி ஆலோசனைகளை வழங்கி பேசினாா். இக்கூட்டத்தில் வாா்டு செயலாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள்,பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.