அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
பெருந்துறையில் இருந்து 400 போ் பழனிக்கு பாதயாத்திரை
பெருந்துறை ஸ்ரீ சிவசக்தி முருகன் பழனி பாதயாத்திரை குழு சாா்பில் 400 போ் பழனிக்கு பாதயாத்திரையை சனிக்கிழமை தொடங்கினா்.
முன்னதாக குன்னத்தூா் சாலையிலுள்ள செல்லாண்டி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 400 போ் அங்கிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனா்.
பாதயாத்திரை பக்தா்களுக்கு சென்னிமலை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் வளா்மதி செல்வராஜ் ஆகியோா் அன்னதானம் வழங்கினா்.