பெருந்துறையில் திடீா் மழையால் வாரச் சந்தை பாதிப்பு
பெருந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாரச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருள்கள் வாங்க வந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனா்.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நல்ல வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விட்டுவிட்டுப் பெய்தது. மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
பெருந்துறையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் வியாபாரிகளும், பொருள்களை வாங்க வந்த மக்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளானாா்கள்.