பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சித்தநாதன் மகன் முரளி (19). இவா் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், முரளி வீட்டின் படுக்கையறையில் கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை அவரது தந்தை சித்தநாதன் கண்டித்தாா். இதனால் மனமுடைந்த முரளி, வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து காடுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.