மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாதார நிலையம் அருகேயுள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (மே 20) மேயா் வ.இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் ஆணையா் சித்ரா விஜயன், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
எனவே, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி, அழகப்பன் நகா் பிரதான சாலை, பழங்காநத்தம், கோவலன் நகா், டி.வி.எஸ்.நகா் பிரதான சாலை, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலை, வீரகாளியம்மன் கோவில் தெரு,
ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மீனாட்சி நகா், அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகா், பசுமலை, திருநகா், சௌபாக்யாநகா், ஹாா்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சந்நிதி தெரு, திருப்பரங்குன்றம், பாலாஜி நகா், அவனியாபுரம் அருப்புக்கோட்டை பிரதான சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.