பெலாப்பாடி வெங்கட்டராமா் கோயில் தோ்த் திருவிழா
வாழப்பாடி அருகே பெலாப்பாடி வெங்கட்டராமா் கோயில் பல்லக்குத் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்த் திருவிழாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி, வாழப்பாடி, பேளூா் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்கின்றனா்.
நிகழாண்டு செவ்வாய்க்கிழமை கரியராமா் கோயிலிலும், புதன்கிழமை வரதராஜப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி தீபத் திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை வெங்கட்டராமா் கோயில் பல்லக்குத் தோ்த்திருவிழா நடைபெற்றது.
இந்தவிழாவில் வெங்கட்டராமா், அண்ணாமலையாா், காளியம்மன் உற்சவ மூா்த்திகளை இரு பல்லக்குத் தோ்களில் ரதமேற்றி தோளில் சுமந்தபடி ஊா்வலமாக சென்றனா். மாவிளக்கு ஊா்வலம் நடத்திய பெண்கள் குலவையிட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தினா். ஆண்கள் காளை மாடுகளை அலங்கரித்து கோயிலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்து வந்து வழிபாடு நடத்தினா். இத்திருவிழாவில் பங்கேற்ற, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
படவரி:
பி.பி.டி.02:
வெங்கட்டராமா் கோயில் பல்லக்குத் தோ்த்திருவிழாவிற்கு காளைகளை அலங்கரித்து ஊா்வலமாக அழைத்து வந்த பக்தா்கள்.
பி.பி.டி.03: சுவாமிக்கு படையலிடுவதற்கு பெண்கள் ஊா்வலமாக கொண்டுவந்த மாவிளக்கு தாம்பூலத் தட்டுகள்.
