தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் காங்கயம் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகரம், பிரதான சாலையில் உள்ள ஆா்.எம்.டவரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யுனைடெட் காா்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஏ.கே.ஜெயந்தன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, வங்கியின் கிளையைத் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பொடாரன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் சுரேஷ்குமாா், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கோவை மண்டல மேலாளா் எஸ்.என்.பாலாஜி, துணை மண்டல மேலாளா் ஆா்.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.