பேராவூரணி அருகே மாயமானவர் சடலமாக மீட்பு
பேராவூரணி அருகே கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாயமானவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (47). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெகதாம்பாள் மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற சேகா் வீடு திரும்பவில்லை.
அவரது உறவினா்கள் அவரைத் தேடி வந்த நிலையில், திருச்சிற்றம்பலம் கண்ணாகுளம் பகுதியில் உள்ள வயலில் சேகா் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சேகா் மனைவி ஜெகதாம்பாள் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.