பேராவூரணியில் மே தின கொடியேற்று விழா
பேராவூரணியில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,லாரி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது.
பேராவூரணி ஆவணம் சாலையில் லாரி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு சங்க காப்பாளா் ஆரிய கண்ணன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாநில குழு உறுப்பினா் வி.ராஜமாணிக்கம் கொடியேற்றி வைத்து பேசினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கடைவீதியில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.செல்வம் கொடியேற்றினாா். இதேபோல்
கொன்றைக்காடு, ஆதனூா், பின்னவாசல், வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 16 இடங்களில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்று விழாவில்
மாவட்டக்குழு உறுப்பினா் ஆம்பல் துரை.ஏசுராஜா, ஒன்றியச் செயலாளா் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சிதம்பரம், நீலமோகன், எஸ் .ஜகுபா்அலி, குமாரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.