பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் எதிரே ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (55). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலையில் கடந்த 4-ஆம் தேதி பிற்பகல் சென்று கொண்டிருந்தாா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் எதிரே சென்றபோது, அவ்வழியே வந்த தனியாா் பேருந்து ஆட்டோ மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த பிரேம்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.