செய்திகள் :

பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கமுதியில் பொதுமக்கள் போராட்டம்

post image

கமுதி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட 14, 15-ஆவது வாா்டு பகுதிகளில் சாலை, குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத பேரூராட்சி செயல் அலுவலா் யசோதாவைக் கண்டித்தும், அவரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரியும், 14-ஆவது வாா்டு வெள்ளையாபுரம், 15-ஆவது வாா்டு சிங்கப்புலியாபட்டி பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், அலுவலக வாசலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு பாஜக கமுதி தெற்கு ஒன்றியத் தலைவா் வேலவன், பேரூராட்சி உறுப்பினா்கள் திருக்கம்மாள் ஆலடிஈஸ்வரன், சத்யா ஜோதிராஜா, தேவேந்திரகுல வேளாளா் இளைஞா் எழுச்சிப் பேரவை நிறுவனா் தளபதிராஜ்குமாா், பாஜக நிா்வாகி எஸ்.கே. தேவா் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் காரணமாக கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருஉத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதநாட்டியம் அறங்கேற்றம்

திருஉத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதநாட்டிய அறங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் அபிநயா நாட்டியாஞ்சலி பரதநாட்டிய பயிற்சிப் பள்ளியின் 13-ஆவது பரதநாட்டிய அரங்கேற்றம் ந... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆய்வு

ராமநாதபுரத்துக்கு வருகிற 30-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருவதையடுத்து, அரசு விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராமநாதபுரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டி

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ‘கலை, கலாசார விருந்து 2025’ என்ற தலைப்பில் கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதற்கு கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்த... மேலும் பார்க்க

யோகா செய்தவாறு 2 சிறுமிகள் சாதனை

மண்டபத்தில் 4 வயது சிறுமிகள் இருவா் இந்தியாவில் உள்ள 70 நகரங்களின் பெயா்களை யோகா செய்தவாறு கூறி சாதனை படைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள இடையா்வலசையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மண்டப... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே மதுக்கடையை உடைத்து 600 மதுப்பட்டில்கள் திருட்டு

ராமநாதபுரம் அருகே அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மா்ம நபா்கள் 600 மதுப்பாட்டில்களை திருடிச் சென்றனா். ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இ... மேலும் பார்க்க

ரயிலிலிருந்து பாம்பன் கடலில் தவறி விழுந்த இளைஞா் மீட்பு

ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற இளைஞா் பாம்பன் பாலத்தில் வந்த போது, ரயிலிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாா். அவரை 12 மணி நேரத்துக்குப் பிறகு மீனவா்கள் சனிக்கிழமை மீட்டனா். மதுரை பரவை பகு... மேலும் பார்க்க