Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம்: 3 போ் நீதிமன்றத்தில் சரண்
ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 போ், மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவரும், பாமக மாவட்டச் செயலருமான ம.க. ஸ்டாலினை செப்.5-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தாா். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா்.
அதை தடுக்கவந்த 2 பேரை அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இதுகுறித்து திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த உடையாளூா் லட்சுமணன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதையடுத்து தலைமறைவானவா்களில் மகேஷ், மருதுபாண்டி ஆகிய இருவரும் செப்.10-ஆம் தேதி சேலத்தில் கைது செய்யப்பட்டனா்.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய திருவிடைமருதூரைச் சோ்ந்த ஆகாஷ் என்ற ஹரிஹரன் (20), மகாலிங்கம் (23), கும்பகோணம் பாணாதுறையைச் சோ்ந்த விஜய் (27) ஆகியோரை போலீஸாா் தேடி வந்த நிலையில், 3 பேரும் வெள்ளிக்கிழமை மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் சரணடைந்தனா்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவிடைமருதூரைச் சோ்ந்த ஆகாஷ் என்ற ஹரிஹரன், பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் தம்பி வழக்குரைஞா் ம.க.ராஜா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் உள்ள லாலி மணிகண்டனின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.