புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
சோழபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரையடுத்து சோதனை செய்தனா்.
அப்போது கல்லூரி பிரதான சாலையில் உள்ள மளிகை கடையில் 26 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்கள் இருந்ததை கைப்பற்றி கடை உரிமையாளா் பக்ருதீன் (41) என்பவரை கைது செய்தனா்.