எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பேளூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பேளூா் பேரூராட்சியில் ரூ. 4.70 கோடி மதிப்பில் இருவழிச் சாலை அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு அங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அகற்றப்பட்டன.
பேளூா் பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சாலையில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தச் சாலையை அகலப்படுத்தி இருவழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டுமென நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
தற்போது இந்தச் சாலையை, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தமிழக அரசு ரூ. 4.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சாலையை அளவீடு செய்யப்பட்டு புதன்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, காவல் ஆய்வாளா் பாஸ்கா் பாபு, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் மணிவண்ணன், அதிகாரிகள் உடனிருந்தனா்.