பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு
திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் லட்சுமணபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுவேலு (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவருக்கு திங்கள்கிழமை விற்பனை செய்தாா். இதன் மூலம் கிடைத்த ரூ.6.40 லட்சத்தை தனது இரு சக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துவிட்டு நந்தவனப்பட்டி மேம்பாலம் பகுதியிலுள்ள உணவகத்தில் நிறுத்தினாா். உணவுப் பொருள்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
பெட்டியை உடைத்த மா்ம நபா்கள் அதிலிருந்த ரூ.6.40 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் பொன்வேலு புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உணவகத்தின் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனா். அதில், 2 நபா்கள் இரு சக்கர வாகனத்திலுள்ள பெட்டியை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.