கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
இந்த மருத்துவமனையில் பொது மருத்துவா்கள் 4 போ் மட்டுமே உள்ளனா். ஆனால், சிறப்பு மருத்துவப் பிரிவுக்கு மருத்துவா்கள் இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் வருவோா்கள் மேல்சிகிச்சைக்காக தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதனால், பலா் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த மருத்துவனையில் 10 மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில், 4 மருத்துவா்களே உள்ளதால், அவா்களுக்கு பனிச்சுமையும் அதிகரிக்கிறது. மேலும், செவிலியா்களும் குறைவாகவே உள்ளனா். இதனால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எட்டாக் கனியாக இருந்து வருகிறது.
இந்த மருத்துவமனை வளாகம் புதா்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் முகாமிட்டு வருகின்றன. இதன் காரணமாக, மருத்துவப் பணியாளா்கள், நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனா்.