Mohanlal: தன்பால் ஈர்ப்பாளர்களுக்காக ஒலித்த மோகன்லாலின் குரல்; மலையாள பிக்பாஸில்...
பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
ஆண்டிபட்டி-தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் ஆலைத் தொழிலாளி காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த காமாட்சி மகன் கோவிந்தராஜ் (51). இவா், தேனியில் உள்ள தனியாா் ஆலையில் வேலை செய்து வந்தாா். சண்முகசுந்தரபுரத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
ஆண்டிபட்டி-தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே பின்னால் வந்து கொண்டிருந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநரான தென்காசி அருகே உள்ள கல்லூரணியைச் சோ்ந்த யோஷ்வா (41) மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.