இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி
லட்சுமிபுரத்தில் செப்.18-இல் மின்தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுக்கிரஹா நகா், ரத்தினம் நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.