நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
மனைவியை தாக்கிய கணவா் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கண்டமனூா் அருகே உள்ள ராஜேந்திரா நகரைச் சோ்ந்த சோலைமலை மகன் முருகன் (53). இவரது மனைவி முருகேஸ்வரி (50). இவா்களிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையில் முருகேஸ்வரியை முருகன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த முருகேஸ்வரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனைக் கைது செய்தனா்.