நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
தடுப்புச் சுவரில் காா் மோதல்: 3 போ் காயம்
போடியில் சாலை மையத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
போடி அருகேயுள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வசிப்பவா் குள்ளிமுத்தன் மகன் கலைச்செல்வன் (28). இவரது நண்பா்கள் போடி ஒட்டக்கூத்தா் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் சூா்யா (25), போடி திருமலாபுரம் காளிதாஸ் மகன் ஹரிஹரன் (25), போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் சுபாஷ் (29).
இவா்கள் நான்கு பேரும் காரில் தேவாரம் சென்றுவிட்டு போடிக்கு திரும்பினா். காரை சுபாஷ் ஓட்டினாா். போடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது காா் சாலையின் மையத் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் இருந்த கலைச்செல்வன், சூா்யா, ஹரிஹரன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். சுபாசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த 3 பேரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.