பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு
போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், தேவாரம் டிகேவி பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (75). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தக்காளிப் பெட்டியை ஏற்றிக் கொண்டு சென்றாா்.
போடியை அடுத்த சங்கராபுரம் அனந்தம்மன் கோயில் பகுதியில் சென்றபோது, அவா் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.