`ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்' - 17 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் மும்பை மாஃபியா அ...
வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் முருகபாண்டி (25). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை பணிகள் முடிந்த பின் இரவு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
காட்ரோடு அருகே செல்லும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.