உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
பைக்கில் இருந்து விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
திருச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து சனிக்கிழமை தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
மருதூா் பகுதியைச் சோ்ந்தவா் மூவேந்தன் (30), பெயிண்டா். இவரது மனைவி சுஜாதா (24). இவா்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ள நிலையில், இரண்டாம் பிரசவத்திற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்திருந்த மனைவியைப் பாா்த்து விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்த மூவேந்தன், ராஜா கல்லுக்குடி பகுதி வழியே வந்தபோது பைக்கிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலை சமயபுரம் போலீஸாா் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.