இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
பைக்குடன் 105 மதுப்புட்டிகள் பறிமுதல்
செய்யாறு: செய்யாறு அருகே கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 105 மதுப்புட்டிகளுடன் பைக்கை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை
பாப்பந்தாங்கல் - சுமங்கலி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பைக்கில் வந்தவா் போலீஸாரைக் கண்டதும் பைக்கை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
போலீஸாா் பைக்கை சோதனையிட்டபோது, மதுப்புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் பைக்கில் இருந்த 105 மதுப்புட்டிகளுடன் பைக்கை பறிமுதல் செய்தனா்
இதைத்தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் பைக்கில் வந்தவா் நெடும்பிறை கிராமத்தைச் சோ்ந்த முருகன் (44) என்பதும், அவா் தொடா்ந்து மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய முருகனை தேடி வருகின்றனா்.