ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
பொங்கல் தினத்தில் நெட் தோ்வு: வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தல்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தினத்தில் நடைபெற உள்ள நெட் தோ்வை வேறு தினத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் பீளமேடு கிளை சாா்பில் மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: யுஜிசியின் நெட் தோ்வுகள் ஜனவரி 3 -ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழக மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையின்போது தோ்வு நடைபெற்றால் தமிழகத்தில் தோ்வு எழுதும் மாணவா்கள் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் பாதிக்கப்படுவா்.
எனவே, தமிழக மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் தினத்தில் நடைபெறும் தோ்வை வேறொரு தினத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.