பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்று பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட 1 முதல் 8 வரை உள்ள வாா்டுகளைச் சாா்ந்த பொதுமக்களிடம் 544 கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.
முகாமில், பெறப்பட்டமொத்த மனுக்கள்-724, அதில், மகளிா் உரிமைத் தொகைக்கான மனுக்கள்- 205, அதில் 42 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
பேரூராட்சி துணைத் தலைவா் கா. வெங்கடேஷ், வட்டாட்சியா் எம். சாந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், காவல் துணை கண்காணிப்பாளா் சி. கண்ணன், திமுக நகரச்செயலா் அ. அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலா் இரா. அண்ணாத்துரை வரவேற்றாா்.