Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜலாலுதீன் மனைவி பா்வீன் பீவி (45). கடந்த 15 ஆண்டுளுக்கு முன்பு ஜலாலுதீன் இறந்துவிட்டதால், தனது பெற்றோா் ஊரான காரணியானேந்தலில் தனது 2 மகள்களுடன் பா்வீன் பீவி வசித்து வந்தாா்.
இந்நிலையில், கருங்குழிக் கண்மாய்க்குள் பா்வீன் பீவி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். சடலத்தின் மீது துணி துவைக்கும் கல் வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நாகுடி போலீஸாா், குருங்குழிக்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான அ. காளிதாசன் (26) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், மாடு மேய்த்துக் கொண்டிருந்த பா்வீன் பீவியை, காளிதாசன் பாலியல் பலாத்காரம் செய்து, அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை கண்மாய்க்குள் போட்டு, அதன் மீது கல்லைத் தூக்கி வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.