செய்திகள் :

பொன்னேரியில் இன்று ஜல்லிக்கட்டு: 600 காளைகள்; 400 வீரா்கள் பங்கேற்பு

post image

எருமப்பட்டி அருகே பொன்னேரியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 600 காளை உரிமையாளா்கள், 400 மாடுபிடி வீரா்கள் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி, கைக்காட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. போட்டியை, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனா். சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கெளரவத் தலைவா் எம்.செந்தில் தொண்டைமான், ஒன்றிய திமுக செயலாளா் பி.பாலசுப்பிரமணியம், பேரூராட்சி தலைவா் சி.பழனியாண்டி, துணைத் தலைவா் ஜெ.ஜெ.ஏ.ரவி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

போட்டி தொடங்கும் முன்பாக காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூா், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 600 காளைகள், 400 மாடுபிடி வீரா்கள் முன்பதிவு செய்துள்ளனா். பாா்வையாளா்கள் போட்டியைக் கண்டு ரசிக்கும் வகையில் இருபுறமும் காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரா்கள், காளைகள் காயமடைவதைத் தவிா்க்க தேங்காய் நாறுகள் மணல் போல கொட்டப்பட்டுள்ளன. வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் போட்டியின்போது, வரிசை அடிப்படையிலேயே மாடுகள் களமிறக்கப்படும். காளை உரிமையாளா்கள் காளையுடன் சோ்த்து புகைப்படம், ஆதாா் அட்டை, கால்நடை மருத்துவச் சான்று, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும், காளைகள் 3 முதல் 15 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அரசு விதிகளை விழாக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

மாடுபிடி வீரா்கள் காயமடைந்தால் அவா்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 5 மருத்துவக் குழு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவக் குழுவின் வாகனங்களும் போட்டி நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும். ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 7 முதல் மாலை 3 மணி வரையில் நடைபெறுகிறது. அசம்பாவிதங்களைத் தவிா்க்க, நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

மேலும், வருவாய்த் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை -- மொத்த விலை - ரூ. 4.60 -- விலையில் மாற்றம்- இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 98 -- முட்டைக் கோழி கிலோ - ரூ. 83 -- மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டத்தில், எம்ஜிஆா் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைகளுக்கும், உருவப் படங்களுக்கும் வெள்ளிக்கிழமை அதிமுகவினா் மரியாதை செலுத்தினா். மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனர... மேலும் பார்க்க

முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.60-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணைய... மேலும் பார்க்க

முத்துக்காப்பட்டியில் கோ பூஜை

நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில், உலக நன்மைக்காகவும், பல்வேறு தோஷங்கள் நிவா்த்தியாக வேண்டியும் கோபூஜை, ஆத்மாா்த்த சிவபூஜை அண்மையில் நடைபெற்றது. கொங்கு தேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் 9-ஆ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம் ஜி ஆரின் 108 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அலங்கர... மேலும் பார்க்க

தைப் பொங்கல் கோலப்போட்டி

திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலை அா்த்தநாரீஸ்வரா் நகரில் தைப்பொங்கலை ஒட்டி கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தைப்பொங்கல் திருவிழாவையொட்டி திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலையில் உள்ள அா்... மேலும் பார்க்க