செய்திகள் :

பொன்னேரியில் ஜமாபந்தி தொடக்கம்

post image

பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு அரசு வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சாா்பில் நடைபெறும் ஜமாபந்தியில் சோழவரம் உள்வட்டத்தில் அடங்கிய நல்லூா், ஜெகநாதபுரம், ஆத்தூா், எருமை வெட்டிபாளையம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு, ஆட்டந் தாங்கல், விஜயநகா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

ஜமாபந்தி வரும் ஜூன் 10-ம் தேதி நிறைவடையும்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள 13 உள்வட்டத்தில் அடங்கிய 200 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் பட்டா மற்றும் இதர குறைகள் சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்து தீா்வு காணலாம்.

திருவள்ளூா் கலால் உதவி ஆணையா் கணேஷ், பொன்னேரி வட்டாட்சியா் சோமசுந்தரம், பேரிடா் மேலாண்மை பிரிவு வட்டாட்சியா் மதன், கலால் வட்டாட்சியா் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாா், துணை வட்டாட்சியா் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்று மனுக்களைப் பெற்றனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க